தண்டால் செய்வதால் உடல் வலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளைக் கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் இது வரை புஷ்-அப் செய்ததில்லை என்றால் சில வீடியோக்களைப் பாருங்கள். இந்த திடப்படுத்தும் உடற்பயிற்சி பல்வேறு காரணங்களுக்காக நன்மையை அளிக்கும்.
நன்மைகள்:
பல்வேறு தசைகளின் ஈடுபாடு – புஷ்-அப் செய்வதால் உடலின் மேற்பகுதியில் உள்ள பல தசைகள் முனைப்புடன் வேலை செய்யும். ட்ரைசெப்ஸ், நெஞ்சு மற்றும் தோள்பட்டைகள் போன்ற பகுதிகள் அனைத்தும் இதனால் வலிமையுடன் செயல்படும்.
இதயக்குழாயின் பயன்கள் – இந்த உடற்பயிற்சி கொழுப்பைக் குறைக்கவும் தசைகளை வளர்க்கவும் உதவும். கார்டியோ உடற்பயிற்சிகளைப் போல் இதனையும் சீரான முறையில் செய்யலாம். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் இதயக்குழாயின் பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
எலும்பு திணிவு – புஷ்-அப் உடற்பயிற்சியை சீராக செய்து வந்தால், உங்களின் தோள்பட்டை, கைகள், முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவைகள் வலுவடையும். புஷ்-அப் செய்து வந்தால், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் கூட உங்கள் எலும்புகளும் வலிமையுடன் இருக்கும்.
மெட்டபாலிசம் – தண்டால் செய்வதால் மெட்டபாலிசம் துரிதமாகும். இதனால் கொழுப்பு சிறப்பான முறையில் குறையும். தண்டால் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
புல் அப் (மேலே இழு): மார்புப் பகுதியிலுள்ள கொழுப்புகளை நீங்கள் எரிக்க விரும்பினால், கால்களைத் தூக்கி வைத்தவாறு பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய மார்பகத் தசைகளில் இறுக்கங்கள் ஏற்படும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கைகள், இடுப்புப் பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையும். அப்பகுதிகளிலுள்ள தேவையற்ற சதை குறையும்.
அப்ஸ்: இந்த பயிற்சிகளில் பல்வேறு முறைகள் உள்ளன. 2 வாரத்தில் நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு நாளைக்கு 3 முதல் 4 அப் முறைகள் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். 4 செட்களாக 24 தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யும் வழிமுறை இதில் மிகவும் சிறந்த பலனளிக்கும். முதல் வாரத்தில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்ஸ் பயிற்சிகளை செய்யலாம். 2-ம் வாரத்தில் தினமும் செய்து வரலாம். நீங்கள் இது வரை அப்ஸ் செய்ததில்லை என்றால் சில வீடியோக்களை பாருங்கள். இந்த திடப்படுத்தும் உடற்பயிற்சி பல்வேறு காரணங்களுக்காக நன்மையை அளிக்கும்.