என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே
என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை…
தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே
என் இரவும் விடிந்து விடுகிறது…
பகலெல்லாம் தனிமையை எண்ணி நான்
தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும் விடுகிறது…
தனிமை தன் கையில் இருக்கும் தூரிகையினால்
என்னில் சில சித்திரங்களையும் வரைந்து விடுகிறது…
கண்ணீரை தண்ணீராய் கருதி நீச்சல் போடும் தனிமையில்
எதிர் நீச்சல் போடாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்…
என்னை நானே நொந்து கொள்ளுமளவு
தரிசிக்க முடியாத தவிப்புக்களையும் தருகிறது…
வலுக்கட்டாயமாக என்னை சிறைபிடித்து வாட்டியும் எடுக்கிறது…
நிகழ்கால தனிமையினால் புறக்கணிக்கும் போது
எதிர்கால விருச்சத்திற்க்காக காத்திருக்கிறேன்…
காலம் பதில் சொல்லும் என்பார்…
என் தனிமைக்கு மட்டும் காலத்திடம் பதில் இல்லையோ என்னவோ????…