தமிழ் நெஞ்சக்குறுமல்

0
1431

தமிழ் மண்ணில் பிறந்து
தமிழ் தாயை வணங்கி
தமிழன் எனும் பெயரோடு
தரணியில் நடை போடுகிறோம் !

மூவேந்தர்கள் போற்றியும்
பாவேந்தர்கள் பாடியும்
பாரதத்தை ஆண்ட மொழி – நம்
பாசமுள்ள தமிழ் மொழி !

சாதி சமயம் நீ பிரித்தாய்
மோதியே சாவை கண்டாய்
பாதி வந்த அந்நியரிடம்- தமிழ்
நாட்டை கொடுத்து நடுத்தெருவானாய்!

நிலை கெட்ட சமுதாயம்
நிலைத்து விட்ட உலகமிதில்
நித்தம் பல அழுகுரல்கள்
சத்தம் எல்லாம் செவிபிழக்க!

அன்னை தமிழோ வேகின்றாள்
பிள்ளையை பிரிந்து போகின்றாள்
கண்ணீர் துளியும் வடிக்கின்றாள்
கதறி கதறி அழுகின்றாள் !

தானாய் விடிவெள்ளி தோன்றுமா ?
தமிழுக்கு விடிவு பிறக்குமா?
தமிழன் நானென பார்க்கையில்
தமிழ் நெஞ்சு பொறுக்குதில்லையே…!

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments