தம்பதிகள் குழந்தைப்பெற்றுக்கொள்ள ஏற்ற வயது!

0
2692
திருமணமான தம்பதிகள் இன்றைய காலகட்டத்தில் சூழலின் காரணமாக குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். அது ஒரு வகையில் நல்லதே என்றாலும் கூட, உடல் ரீதியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம் என்கிறது மருத்துவம். வயது அதிகம் ஆகும்போது பெண்ணின் கருமுட்டையின் தரம் குறைவதால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. 20 முதல் 35 வயதே குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயதாகும். அதற்கும் அதிகமான காலதாமதம் தாய்க்கும், சேய்க்கும் உடல் நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. காலம் தாழ்த்தி குழந்தை பெறுவது எம்மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்!
p
பேறுகால நீரிழிவு உண்டாக வாய்ப்புள்ளது என்பதால், சிசுவின் வளர்ச்சி அதிகமாகி பிரசவத்தின் போது சிக்கல் உண்டாகலாம்.
வயதாகும் போது பேறுகாலத்தின் போது உண்டாக கூடிய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகிறது.
 
பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வாய்ப்பு 35 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களுக்கு 41 சதவீதம் என்றும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 47 சதவீதம் வரை இருக்கிறதென்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
தாமதமான கர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
இன்றைய மருத்துவ வளர்ச்சி அளப்பறியது தான் என்றாலும், தாமதமான கருத்தரிப்பை நாமே திட்டமிட்டு தவிர்ப்பதன் மூலம் இன்னல்கள் எதையும் சந்திக்க வேண்டியதில்லை.
வயது ஆக ஆக ஆணின் விந்தணுவின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் கருத்தரிப்பு ஏற்படாமலே போவதற்கு வாய்ப்பு உள்ளது.விந்தணுவின் எண்ணிக்கை 15 மில்லியனுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடி கருத்தரிப்பு நிகழ வாய்ப்பு இருக்கிறது.இவை எல்லாவற்றையும் தாண்டி மரபு வழி காரணமாக அல்லது வாழ்வியல் முறையினால் “அஜீஸ் பேர்மியா” எனப்படும் விந்தணுவே இல்லாத நிலையும் வயதாவதால் ஏற்படுகிறது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments