தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து
என் தலைமுறை விதியாவது மாறனும்னு
என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுல
வெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையில
எனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு
உருப்படியா படிச்சிருனு சொல்ல
படிச்சிட்டா போச்சினு சிரிச்சிட்டே போனா ஜந்து வயசில
மலை மலையாய் மனசில
பல நாள் கேள்வி எனக்குள்ள
ரெண்டு அறை வீடு லயத்துல
இருக்க இடமும் பட்டா போட்டு தரல
மழ வந்தா தண்ணீ எல்லா வீட்டுல
தகரம் கல்லும் தான் கூரையில
குடிக்க தண்ணீ வேணும்னு மூனு கிலோமீட்டர்
நடந்தே போனே மண்ணு ரோட்டுல
ரெண்டு ஊரு சந்தியில வந்த
ஊற்று தண்ணீய புடிக்க நாலு பேரு
சண்டைதா எப்போதா மாறும் இந்த நிலம
முப்பது நாள் வேல மலையில
காஞ்ச ரொட்டி சோறுதா எங்க சாப்பாடு
இன்னமும் இந்த நிலைதா பல எஸ்டேட்டுல
படிக்கட்டு கட்டல
பாதனு சொல்ல தார் போட்ட ரோட்டும் இல்ல
என் புள்ள பெரிய படிப்பு படிக்க
டவுனுக்கு போக ஊருக்குனு பஸ் இல்ல
செத்தாலும் இம்மண்ணுல
எனக்குனு சொல்ல ஆறடி நிலமும் இல்ல
போதும் போதும் இந்த நிலம
என்னோட போகட்டும் என் புள்ளயாவது
பத்தடி இடத்த சொந்தனு சொல்ல
உரிமைக்காக போராடுவேன்
என் தலைமுறையாவது நல்லாயிருக்க
எல்லாம் மாறனும் மாறும்…!
சமூக உண்மையும் எதிர்பார்ப்பும் நிறைந்த வரிகள்👌