தாய்

0
1260

 

 

 

 

 

 

 

என்னை பத்துமாதம் சுமந்தவளே

பத்திரமாய் வளர்த்தவளே

என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே

என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே

என்னை வளர்த்தாய் உன் கருவில்

கடவுளைக் கண்டேன் உன் உருவில்

நிலவைக் காட்டி சோறூட்டி

மடியில் வைத்து சீராட்டி

அழகாய் வளர்த்தாய் சீமாட்டி

இதை எங்கும் சொல்வேன் மார்த்தட்டி

சூரியனின் கதிர்கள் போல் சுட்டெரிக்கும் அவளுடைய விழிகள்

எரிப்பதற்காக அல்ல என்னுடைய வெளிச்சத்திற்காக

காற்றாக நீ இருந்தால் அதில் கலந்த தூசாக நான் இருப்பேன்

யார் கண்ணிலும் படாமல் அழைத்து செல்வாய் என்ற நம்பிக்கையுடன்

அகில உயிர்களுக்கெல்லாம் அன்னையே நீ ஒரு தெய்வம்

அவளின்றி அமையாது இவ்வையம்

இவ்வாறு கண்ணாடியும் உன் பிம்பத்தையே காட்டியது உனக்குள் ஒருத்தியாக…!

 

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments