திராட்சை – Grapes

0
1434

திராட்சை – (Grape) இலையுதிர்க்கும் கொடியினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். கிராப்பொ எனும் இத்தாலிய வார்த்தைக்கு கொத்தாக என்று ஒரு பொருள் உண்டு இதன் அடிப்படையில்தான் கறுப்பு, அடர் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில். 6 முதல் 300 வரையான கொத்துக்களில் பழங்களை தரும் இந்த கொடிக்கு ஆங்கிலத்தில் கிரேப் என பெயரிடப்பட்டிருக்கிறது. சில வகை திராட்சைகளில் விதைகள் இருக்காது.

கொடிமுந்திரி எனவும் அழைக்கப்படும் திராட்சையின் அறிவியல் பெயர் Vitis vinifera. இது மெராக்கோ, வட போர்த்துக்கல் முதல் தென் ஜெர்மனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய உட்பட்ட மத்தியதரைப் பகுதி, மத்திய ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா இடங்களை தாயகமாகக் கொண்டது. தற்போது 60 சிற்றினங்களில் 5000 முதல் 10,000 வரையான திராட்சை வகைகள் உள்ளன
சிறிய அளவிலான திராட்சைகள், விட்டிஸ் லபுருஸ்கா (Vitis labrusca), விட்டிஸ் ரிப்பாரியா (Vitis riparia), விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா (Vitis rotundifolia), விட்டிஸ் அமுரென்சிஸ் (Vitis amurensis) போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது.

 

 

 

 

 

வளமான வெப்ப மணல்பரப்பில் பதியன் மற்றும் விதை மூலம் திராட்சை கொடி வளர்க்கும் கலை விட்டிகல்சர் (viticulture) என்று அழைக்கப்படுகிறது, 50 அடி வரை வளரும் திராட்சைகொடியின் அகன்ற உள்ளங்கைகளைப்போன்ற இலைகளின் ஓரங்கள் பற்களைக் கொண்டிருக்கும்.

கொத்தான இதன் மலர்கள் பச்சை நிறத்திலிருக்கும் திராட்சையின் அறுவடைக்காலம் ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை, 15 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். ஒரு கொடி 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும்
உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் வளர்க்கப்படும் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகவும், 27% நேரடியாகப் பழமாகவும், 2% உலர் பழமாக்கவும் படுகிறது.
. பல வகை திராட்சைக்கொடிகளை வகைப்படுத்தும் அறிவியல் ஆம்பீலொகிராஃபி (Ampelograph ) எனவும், திராட்சை பழத்திலிருந்து வைன் தயாரிக்கும் கலை Oenology என்றும் அழைக்கப்படுகிறது. திராட்சையிலிருந்து, வினிகர், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் ஆகியவையும் செய்யப்படுகின்றன.

பொதுவில் திராட்சைகள் உண்ணத்தகுந்த – Table grapes மற்றும் வைன் தயாரிக்கும் wine grapes என இருவகைப்படும். விதைகளில்லா திராட்சைகள் இப்போது அதிகம் உற்பத்தி செய்யபடுகின்றன. பிரபல திராட்சை வகைகள்; பன்னீர் திராட்சை, அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌), அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ் ,மாணிக்சமான், சோனாகா,சரத் (விதையில்லாதது‌). வேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம்
திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்பு, மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு திராட்சை சதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் ,சர்க்கரை, பெக்டின் முதலானவையும் டார்டாரிக் , மாலிக் மற்றும், சிட்ரிக் அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் நிறைய விட்டமின்களும் உள்ளன.

செரிமானச் சக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது எனத் திராட்சை பழத்தின் மகத்துவத்தை பட்டியல் இடலாம்.
திராட்சை உற்பத்தியில் முதலிடத்தில் ஸ்பெயினும், தொடர்ந்து இத்தாலி, சீனா மற்றும் துருக்கியும் உள்ளன.

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments