தேங்காய் தண்ணீர் அருந்துவதன் பயன்கள்

0
2259
தேங்காய் பல்வேறு பயன்களை தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உபயோகமற்றது என்று தென்னையில் எதுவும் கிடையாது. பெரும்பாலும் இளநீரின் குணநலனும், தேங்காய் எண்ணெயின் பயனும் பொதுவாக எல்லோரும் அறிந்தது. அதே வரிசையில் தேங்காய் தண்ணீரிலும் பல மருத்துவ குணநலன்கள் உள்ளன. ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தாலே ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்!
ரத்த பிளாஸ்மா என்பது நமது ரத்தத்தின் ஒரு அங்கம். ஆனால் இந்த ரத்த பிளாஸ்மாவை போன்றே தேங்காய் தண்ணீரின் குணநலன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவசர காலங்களில் உயிரிழப்பை தவிர்க்க ரத்த பிளாஸ்மாவிற்கு பதிலாக தேங்காய் தண்ணீரை உபயோகிக்கலாம்.
 
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் சளி, இருமல், காயச்சல் உண்டாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
 
உடலின் ஜீரணத்தை தேங்காய் தண்ணீரானது சீராக வைக்கிறது. இவற்றில் கொழுப்பு தன்மையானது மிகக்குறைவாக உள்ளதால், அதிக அளவு பருகலாம். அதனால் இரைப்பை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.
 
உடல் எடையை குறைக்கவும் இவை உதவுகின்றன. தேங்காய் தண்ணீர் உடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டோமென்றால், குடலில் உள்ள பூச்சிகள் வெளியேறுகின்றன.
 
நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட குணநலன்கள் தேங்காய் தண்ணீரில் உண்டு. முகப்பரு வந்தால், தேங்காய் தண்ணீரை முகத்தில் தடவினால் முகப்பரு சரியாகிறது. அதே போல் சருமப்பிரச்னைக்கும் இவற்றை பயன்படுத்தலாம்.தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுதும் உடலில் தண்ணீரின் அளவு குறைவதில்லை.
கர்ப்ப காலங்களில் தேங்காய் தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தம் தொடர்பான எந்த பிரச்னையும் வருவதில்லை. 
மது அருந்திய பின்பு ஏற்படும் தலைவலி, தலைசுற்றல் நேரங்களிலும் தேங்காய் தண்ணீர் குடித்தால் உடனடி பலன் கிடைக்கிறது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments