தேவைதானா இந்தக்காதல்

2
1035
IMG-20210128-WA0014-718e81fa
காதல் வேண்டாம்

நித்தம் உனை எழுப்பி விட்டு
முற்றம் தனைத் தான் கூட்டி
காலை முதல் உணவதனை
விதவிதமாய்ப் பதமாக்கி
தயவாய்த் தான் அளிக்கும்
தாயவள் இருக்கையிலே
தாரமொன்று தேடி அலைவது
தரமான செயலொன்றோ

சொந்தங்கள் ஆயிரம்
சோறுபோட இருந்தாலும்
பந்தம் ஒன்று தேடி
பலநாள் அலைவது
பண்பான செயலொன்றோ

பட்டம் வேண்டி படிப்பவனை
மனம்மாற்றி மட்டமாக்கி
திட்டமிட்டு குடிக்க வைக்கும்
தீராத காதல் கொண்டு- பின்
பிரிந்து போன கதை எல்லாம்

காலம் வந்து கைகூட
காதல் வந்து கைசேரும்
காதல் எனும் உணர்வு ஒன்று
தேவை எனின் தேடிச்செல்
இல்லை எனின் பொறுத்துக்கொள்
கடைசிவரை காத்திருந்தால்
கனிவான காலம் வரும்
வலிந்து சென்று வர வைத்தால்
நலிந்து போகும் கல்யாணம்

5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super ji….!

Last edited 3 years ago by Gobikrishna D
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Yes…