தொடுவானமாய் தொலைவாய்

0
534
8d9f968897efcd2521ce3f181701dd91-0619412e

 

 

 

 

 

உன் விரல் கோர்த்து
ஒரு பயணம் போதும்
உன் மடி சாய்ந்து
ஒரு தூக்கம் போதும்
உன் தோள் சேர்ந்து
ஒரு அழுகை போதும்

என் ஏக்கம் தீர்க்க
உன் பார்வை போதும்
என் துயர் நீக்க
உன் சொல்லே போதும்
என் விழிநீர் துடைக்க
உன் விரல் போதும்

உன் தலை கோதும்
வாய்ப்பொன்று போதும்
உன் அருகில் வரும்
வரமொன்று போதும்
உன் மனதின் ஓரம் – என்
நினைவொன்று போதும்

தொடுவானம் நீ – ஒருமுறை
தொட முடிந்தால் போதும்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments