உடற்பயிற்சிகளுக்கு என்றுமே உடனடி பலன் உண்டு. ஒவ்வொரு உடற்பயிற்சிக்கு ஏற்ப உடலில் பாகங்கள் வலுவும், பொலிவும் பெறுகின்றன. அந்த வகையில் தொடைப்பகுதியில் உள்ள சதையை குறைப்பதற்கு எளிமையான உடற்பயிற்சி சில உள்ளன. இவற்றை நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் என தொடர்ந்து செய்து வந்தால், மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களையும் மடக்கி மேலே, கீழே என தூக்கி இறக்க வேண்டும். இதே போன்று இருபது முறை இரண்டு கால்களையும் மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.
அடுத்ததாக தரையில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு இருபது முறை கால்களை மேலே தூக்கி இறக்க வேண்டும்.
அதே போன்று படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்
அதே போன்று படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்
லிஃப்ட்களை உபயோகப்படுத்தாமல் எப்போதும் மாடிப்படிகளில் ஏறி, இறங்க வேண்டும். இந்த பயிற்சி தொடைப்பகுதியை குறைக்க பெரிதும் உதவுகிறது.