நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04

0
578

 

 

 

 

கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி.

“பாஸ் நெக்ஸ்ட் என்ன பண்ணணும்.” என்றான் சத்யா.

“நீ உள்ள போகணும்”

“எதுக்கு பாஸ்”

“இங்க எவனாவது ஒருத்தன் நமக்கேத்த மாதிரி சிக்குவான். அவனை வைச்சு அந்த கோ.கி க்கு ஒரு கொக்கியை போடு. அந்தாளை பத்தி புல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணு.”

“பாஸ் அப்போ நீங்க”

“போன வாரம் வந்த சாந்தி கேஸ் இன்னும் டீல்ல நிக்குது. அதை பாலோ பண்ணணும். நான் ஈவினிங் ஆபிஸ் வந்திடுறேன். அதுக்குள்ள வேலையை முடிச்சிடு.”

“ஓகே பாஸ்”

கார் கதவை திறந்து வெளியே வந்தான் சத்யா. சட்டையின் கீழ் முனையை இழுத்து சரி செய்து விட்டு உள்ளே நுழைந்தான். ரிசப்ஷனில் இருந்த பெண் பதுமை போல் இருந்தாள். சத்யாவை பார்த்ததும் நளினத்துடன் புன்னகைத்தாள். அவளை பார்த்த சத்யா பதிலுக்கு புன்னகை செய்துவிட்டு உள்ளே சென்றான். அந்த கட்டடத்தை முழுமையாக நோட்டமிட்ட சத்யா யாரோ ஒருவரைக் கண்டதும் மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். அதே நேரம் அருகில் வந்த ஒரு பெண்மணி,

“ஸார் கேன் ஐ ஹெல்ப் யூ?”

“எஸ் யூ கேன்”

“ஸார் இங்க எல்லா நகையும் கிடைக்கும், எல்லா டிசைனும் கிடைக்கும். நீங்க என்ன மாதிரி நகை பாக்கிறீங்க? என்ன மாதிரி டிசைன்ல பாக்கிறீங்க?” அவள் கேட்ட தோரணையும் வேகமும் அவள் அந்த வேலைக்குப் புதியவள் என்பதை அடையாளம் காட்டியது.

“அதோ அங்க நிக்கிறாங்களே சுவர்ணா”

“ஆமா”

“அவ என் மாமா பொண்ணு அவக்கிட்ட கொஞ்சம் பேசணும், ஹெல்ப் பண்றீங்களா ப்ளீஸ்?”

 

 

 

 

“வாட்?”

“இரண்டு பேரும் அடுத்த மாதம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் அவங்கக்கிட்ட போயி உங்க  முறைப்பையன் உங்களைப் பாக்க வந்திருக்கார்னு சொல்ல முடியுமா ப்ளீஸ். நான் வெளிய வெயிட் பண்றேன் ப்ளீஸ் ப்ளீஸ்.” என்றான் பாவமாக அளவு கணக்கின்றி தன்னிடமிருந்த ப்ளீஸ்களை தாராளமாகக் கொட்டி.

“ஸார் உங்க நேம்”

“சத்யா”

“ம்ம் சரி இருங்க வர்ரேன்” அந்தப் பெண்ணின் மெழுகுமனது உருகி விட்டிருந்தது.

வேலையில் பிஸியாக இருந்த சுவர்ணாவை நெருங்கிய அந்தப் பெண்,

“மேடம் உங்களை பார்க்க உங்க முறைப்பையன் வந்திருக்காரு”

“வாட் முறைப்பையனா யாரு?”

“நேம் சத்யானு சொன்னாரு. உங்களை கட்டிக்கப்போறவர்னு சொன்னாரு. அடுத்த மாதம் கல்யாணம்னும் சொன்னாரு. கங்கிராஜிலேஷன்ஸ் மேடம்”

“வாட் சத்யாவா? இப்போ எங்க இருக்கான்?” முகத்தில் கோபம் முளைவிட்டு வாட்ஸ்ஆப் இமோஜி போல் சிவத்திருந்தது.

“என்னாச்சு மேடம். வெளிய தான் வெயிட் பண்றாரு”

“சரி நீங்க போங்க நான் பாத்துக்கிறேன்.”

 

 

 

 

 

பைல்கள் நிறைந்த அந்த மேஜையில் காக்கி தொப்பி கம்பீரத்தையும், ஸ்டெத்தஸ்கோப் கருணையையும் சிருஷ்டித்துக் கொண்டிருந்தது.  டாக்டர் மாணிக்கத்தின் முன்னால் பலமான சிந்தனையுடன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை புரட்டியபடி இன்ஸ்பெக்டர் விஜய்மில்டன் அமர்ந்திருந்தார்.

“டாக்டர் நீங்க சொல்றத வைச்சுப் பாத்தா. இந்த கொலைக்கு ஏதோ ஒரு பழிவாங்குற மோட்டிவ் தான் காரணமா இருக்குமா?”

“மே பி அப்படியும் இருக்கலாம். ஆனா அவன் கொலை செய்திருக்கிற விதம் ரொம்ப புரூட்டலா இருக்கு. இன்னொரு சான்ஸ் கூட இருக்கு ஹி மே பி எ சைக்கோ”

“எஸ் ஐ திங்க் சோ. கொலை பண்ணவன் அந்த பாடியைப் புதைச்சிருக்கலாம், பட் குழி தோண்டி உள்ள பாடியை போட்டுட்டு அப்படியே விட்டுப் போயிருக்கான். அவன் தான் பண்ண கொலையை விளம்பரப்படுத்த ட்ரை பண்ணியிருக்கான். ஹி இஸ் ருத்லெஸ்”

“மே பி நீங்க சொல்றதை வைச்சு பார்க்கும் போது அவன் ஒரு சைக்கோவா இருக்கக் கூட சான்ஸஸ் இருக்கு.”

“டாக்டர் இன்னொரு விசயம்.”

“என்ன இன்ஸ்பெக்டர்?”

“கொலை செய்யப்பட்ட வக்கீல் சங்கர் வீட்டில ஒரு ஆதாரம் கிடைச்சுது.”

“என்ன ஆதாரம்?”

“ஒரு பேப்பர்ல யாரோ இரத்தத்தாலேயே கொலைகள் தொடரும் இதோட முடியப்போறதில்லன்னு எழுதி வைச்சிட்டு போயிருக்காங்க”

“இஸ் இட்?”

“எஸ் டாக்டர் அந்த பிளட் சாம்பிள் சங்கரோட பிளட் சாம்பிள் கூட மேச் ஆகுதானு செக் பண்ண சொல்லியிருக்கேன். ஐ திங்க் இட் வில் பி எ வெரி பிக் சேலஞ்ச்”

“எஸ் அந்த பிளட் சாம்பிள் சங்கர் கூட மேச் ஆகலனா அது அந்த கொலையாளியோடதா இருக்கக் கூட சான்ஸஸ் இருக்குல்ல”

“எஸ் டாக்டர் யூ ஆர் கரக்ட் அண்ட் டாக்டர் நீங்க சொல்ற மாதிரி அந்த கொலையாளி சங்கர் இறக்கிறதுக்கு முன்னாடி அவரை பயங்கரமா சித்திரவதை பண்ணியிருந்தான்னா அக்கம் பக்கத்தில சத்தம் கேட்காம இருந்திருக்குமா?”

“உம் பட் சங்கரோட வீட்டில இருந்து அவரை கடத்திக்கிட்டுப் போய் வேற எங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில வைச்சு சித்திரவதை பண்ணியிருக்கலாம்ல. அப்பறமா பாடியை அந்த இடத்தில கொண்டு வந்து போட்டிருக்கலாம்ல.”

“எஸ் டாக்டர் அதுக்கும் சான்ஸ் இருக்கு.”

“இன்ஸ்பெக்டர் எனக்கு என்னமோ இந்த கேஸ் பெரிய தலைவலியா வரும்னு தோணுது. கூடிய சீக்கிரம் அவனை பிடிக்கிறது தான் நல்லது.”

“உம் ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர். அண்ட் தேங்க் யூ. நான் கிளம்புறேன்”

“ஓகே இன்ஸ்பெக்டர் பெஸ்ட் ஆஃப் லக்” மேஜையில் இருந்த தன்னுடைய தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு வெளியேறினார் விஜய்மில்டன்.

ஜீப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. வக்கீல் சங்கரின் கொலைக்கான காரணங்களை பல கோணங்களில் மனதிற்குள் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார் மில்டன்.

“பழிவாங்குற நோக்கம்னே எடுத்துக்கிட்டாலும், எத்தனை கேஸ்ல வாதாடியிருப்பாரு. எத்தனை பேருக்குத் தண்டனை வாங்கி கொடுத்திருப்பாரு. இதில அந்த ஒருத்தனை எங்கேனு போய் தேடுறது?.. எஸ் அது தான் கரக்ட்”

தன்னுடைய மொபைல் போனை வெளியில் எடுத்து திரையில் இருந்த பேட்டர்ன்லாக்கில் கொடூரமான சிக்கல் சித்திரம் ஒன்றை வரைந்து, ஒரு நம்பரை டயல் செய்தார்.

 

 

 

 

 

“ஹலோ நான் இன்ஸ்பெக்டர் மில்டன் பேசுறேன்”

“சொல்லுங்க ஸார்”

“லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்க்குள்ள ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனவங்க லிஸ்ட் வேணும். அதுவும் வக்கீல் சங்கர் வாதாடி தண்டனை கிடைச்சவங்க லிஸ்ட்”

“ஓகே ஸார் நான் ரெடி பண்ணீட்டு கூப்பிடுறேன்.”

மொபைல் திரையில் சிகப்பு நிறத்தை சுட்டு விரலால் சிந்தனையுடன் வருடி மொபைலை பாக்கெட்டினுள் தள்ளினார்.

“கொலைகள் கன்டினியூ ஆகுமா? அப்படினா வேற யாரை கொல்லப்போறான். உண்மையிலேயே பழிவாங்கல் கொலையா இல்லைனா கொலைகாரன் ஒரு சைக்கோவா? ஒரு வேளை சங்கரோட மனைவியோட குடும்பத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமா? இல்லனா சங்கரோட மாமாவே கொலையைப் பண்ணீட்டு, சங்கரோட மனைவி குடும்பத்து மேல பழியைப் போடப் பாக்கிறாரா? உண்மையிலேயே கொலைகள் தொடருமா இல்லைனா அந்த லெட்டர் இந்த கேஸை திசை திருப்பிறதுக்கான முயற்சியா?” என்ற கேள்விகளை தனக்குள்ளேயே திரும்ப திரும்பக் கேட்டுப் பதிலை தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார் மில்டன். சங்கர் வீட்டில் கிடைத்த அந்த லெட்டரில் இருந்த செய்தி அவர் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

“இதோட முடியப்போறதில்ல!!”

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments