நட்பால் வாழ்ந்த நாட்கள்

0
615
IMG_20200731_192518

 

 

 

 

நிலையான நட்பு எப்போதும் இரண்டு வகை
பள்ளி நட்பு பள்ளி பருவ நட்பு
எங்கள் நட்போ இரண்டாம் வகை

நான் என்பது நாங்களானோம்-மூவரானதால் 
ஒரே பள்ளியில் ஒன்றாய் படித்ததில்லை
ஒரு போதும் பகுதி நேர வகுப்பே
பலமாய் இணைத்தது- எங்களை

அதிகமான படிப்பில்லை 
அளவான படிப்புத்தான்
பகுதி நேர வகுப்பு என்பதால்
பாதி நேரம்தான் எங்கள் வருகை

எங்கள் வீதி குறுகியது தான்
ஆனால் ஆமையும் வென்று விடும்  
எங்களோடு நடை செய்கையில்
எங்களை கண்டு ஒளிந்த முதல் இனம்
தொட்டாச்சிவிங்கி என்றால்
எங்கள் வீதியோர விளையாட்டால்
ஒழிந்த இனம் காட்டுத் துளசி

ஒவ்வொரு சந்தியிலும் பத்து நிமிடமாவது
சத்தமாய் பேசுவது எங்கள் வழக்கம் 
பக்கத்து வீட்டார் பகிடி பேசுவதும் உண்டு-
பல வேளைகளில்

கடவுள் நம்பிக்கை அதிகமாய் இல்லை
ஆனாலும் வெள்ளிக்கிழமைகளில்
ஆலய தரிசனம் இல்லாமல் இல்லை
வார இறுதியில் எங்கள் கதைக்களம் நூலகம்

சண்டை இல்லாமல் நட்பு இல்லை
ஆனால் எந்த சண்டையிலும் தனித்திருந்ததில்லை
எங்கள் நட்பிலே இல்லாத ஒன்று
பிரியாவிடை நாங்கள் நட்புடன் வாழவில்லை நட்பாலே வாழ்ந்தோம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments