“நரி இனம் என்றாலே ஏமாற்றி பிழைப்பது”
- நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு. உருவில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சுடுநிலமாகிய சகாராப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர்.
நரி பெரும்பாலும் 2 – 3 ஆண்டுகள் வாழ்கிறது. ஆனால் பிடித்து வளர்க்கப்படும் நரிகள் பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்வதுண்டு. நரிகள் பெரும்பாலும் சுமார் 9 கிலோ.கிராம் எடை இருக்கும். கருவில் வளரும் நாட்கள் 60-63 நாட்கள். ஆனால் ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் வாழும் பெருஞ்செவி நரிகளின் குட்டிகள் கருவில் வளரும் நாட்கள் சுமார் 50 நாட்கள் ஆகும்.
- நாய்ப்பேரினத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் மிகச் சிறியது. ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும்.
- இந்திய நரிகள் தோள், காது, கால்கள் போன்றவற்றில் அதிக வெள்ளையும், கருப்பும் கலந்த முடிகளுடன் காணப்படுகின்றன. ஆனாலும் இதன் நிறம் மஞ்சளும், சிகப்பும், கலந்த சாம்பல் போன்ற மண் நிறத்தில் உள்ளது.மேற்கு வங்காளத்தில் காணப்படும். இவ்வகையான நரிகள் கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.
- இவற்றில் ஆண் நரி கொஞ்சம் பெரியதாக உள்ளது. குறைந்தது 100 சென்டி மீட்டர்கள் உயரம் கொண்டவை. இவை 8 முதல் 11 கிலோ எடை கொண்டவையாக உள்ளன.
நரிகள் வகைகள்
- சிவப்பு நரி
- ஆர்க்டிக் நரி
- கேப் நரி
- கிட் நரி
- ஸ்விஃப்ட் நரி
- நண்டு உண்ணும்
- கோர்ஸாக் நரி
- பென்னெக் நரி
இந்திய நரி அல்லது இமாலய நரி இது நாய் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இவை ஓநாய் போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இதன் தாடையை வைத்து பிரித்துப்பார்க்க முடியும். இவை தென் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும், ஆசியா மைனர், மத்திய கிழக்கு நாடுகள் தெற்கு ஆசியா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
குள்ள நரி நாய்ப் பேரினத்தில் உள்ள நரி இனத்தில் ஒரு வகை.இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது எல்லாம் உண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும்.
நரிகளின் தோற்றம்
இது பார்ப்பதற்கு ஒரு பெரிய பூனையின் அளவுக்கு இருக்கும். இதன் ரோமம் பருவக் காலத்துக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் இதன் அடர்ந்த ரோமம் வெள்ளை நிறமாகத் தெரியும். கோடைக் காலம் ஆகிவிட்டால் சாம்பல் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் இருந்தால்கூட எந்தப் பிரச்சினையின்றியும் இது வாழும். ஏனென்றால், இது வெதுவெதுப்பான முடியுள்ள பாலூட்டி.
நரிகளின் வசிப்பிடம்
இவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும்.
நரிகளின் உணவு
பருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும்.