என் மீதான தவறுகளை ஒரு போதும்
எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட
முனைவதில்லை நான்..
கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய்
எவர் மீதும் கடுஞ்சினம்
கொண்டதில்லை நான்..
தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின்
தள்ளிவிட்ட துரோகியாய் யாரையும்
சுட்டவில்லை நான்..
வார்த்தைகளுக்கு வேலையில்லை எனில்
விளக்கம் பேசி விவாதம் செய்யத்
தயாராவதில்லை நான்..
முன் செல்லும் பாதையில் முள்ளாய்
உறுத்திக் கொண்டே நின்று
காயம் தருவதில்லை நான்..
அவரவர் நிலையில் அவரவர்
சரியே எனும் போது இடையூறாய்
வழிமறிப்பதில்லை நான்..
புரிந்து கொள்ளவும் முடியவில்லை
புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை
எனும் போது புதிராகவே
இருந்து விடுபவள் நான்..
நானென்பது வேறொன்றுமல்ல நான் தான்…