வற்றிய வயிற்றுடன்
துளையிட்ட துணியணிந்து
நடமாடித் திரியும்
ஏழைச்சிறுமி நான்….
அடிக்கும் வெயிலும்
அடை மழையும்
வீட்டுக்குள் புகுந்து
தூங்க விடாமல் பண்ணும்
அதிசய வீடு எனக்கு….
பள்ளி செல்லும்
பாலர் பார்க்கையில்
படிப்பு என்பது
எட்டாக்கனி ஆகிவிட்டதோ?
என்ற ஏக்கம் எனக்கு…
கடற்கரையில்
கடலை விற்று
வரும் பணம்
வயிற்றை நனைக்க கிடைக்கும்
பாக்கட் பணம் எனக்கு….
பணம் இல்லாவிடிலும்
பாசம் நிறை கொண்ட
அன்பாக வாழும்
அழகிய வாழ்வு எனக்கு…
மனிதம் சாகடிக்கப்பட்ட
மனிதர் கொண்ட
செல்வ வாழ்க்கை இல்லை…
சொற்ப பணமேனும்
சாதாரண தேவை
நிறை செய்யும்
சிறப்பான வாழ்க்கை
எனக்கு…
பாடம் படிக்கா
குறை தவிர
குடிசையில் வாழ்ந்திடினும்
நிறை வாழ்க்கை கொண்ட
ஏழைச் சிறுமி நான்…