நான் சென்ற பாதையில்…

0
725
7-end-week-a10ecc1a

 

 

 

 

விந்தையான உலகமிதில் முடிவிலியாய்
விடியல்களின் முடிவு- அதில்
எந்தையின் கரம் பற்றி- நான்
எட்டி வைத்த காலடிச்சுவடு
எல்லாம் என் சிறுமூளைக்குள்
எவ்வாறு தான் புதைந்துள்ளதோ…

அழகான நினைவுகள்- என்
அனுபவத்தின் ஆரம்பம் அவை
ஒருநாள் நீ இறப்பாயென
எண்ணி பின்னோக்கி
நீ நின்றால்- உன் வழி
வரும் வித்துக்களெள்ளாம்
முளைவிடாமல் வாடிடும்
மறவாதே….

மர்மமான தேசம் பற்றி- நீ
செவியெட்டிய கதையெல்லாம்
பொய்யென எண்ணி சிறு
பிள்ளையாய் வளர்ந்ததால்- பல
அனுபவத்தின் பக்கங்களை
கண்முன்னே கண்ட பின்பு
முழிபிதுங்கி நிற்பாய் மானிடா… !

செல்லும் வழியெல்லாம்
பஞ்சென எண்ணி நீ
வைத்த பாதங்கள்
முட்புதராய் சூழ்ந்தாலும்…அதை
வெல்லும் வழியாய் அன்பெனும்
ஈட்டி நீ எறிந்திடு – அது
ஆயுத யுத்தமாய் மீண்டும்
உனக்கே புண்ணானாலும்
கலங்காதே…

உனக்காய் உரித்துள்ள ஒன்றை
உதறி விடாதே – மாறி
உயிருள்ள பொருளா யிருந்தால்
உரிமையும் மாறும் மறவாதே…

அன்பென்று யார் வந்து
அணைத்தாலும் கடந்திடு
சிறு புன்னகையுடன் – காலம்
சொல்லிடும் போது உணர்ந்து
ஏற்றிடு நிஜ புன்னகையுடன்
இத்தனையும் கூறிடும் என்
தத்துவங்கள் கண்டது
நான் சென்ற பாதையில் …

இனி ….
உன் அனுபவ பாதையிடம்
செவி சாய்த்து கேள்- நீ
செல்ல வேண்டிய பாதையின்
திசையினை..

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments