நாய்

0
2955

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.

இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

நாய் வகைகள் : 

             இந்திய பாரியா

             ராஜபாளையம்

            முதொல் ஹவுண்ட்

            சிப்பிப்பாறை

            கன்னி

           அலங்கு மஸ்தீஃப்

           பாக்ஹர்வால் நாய்

           பிஸ்பேன்

          கோம்பை

          இந்தியன் ஸ்பிட்ஸ்

           ஜோனங்கி

          ராம்பர் க்ரேஹவுண்ட்

           கைகாடி

dog

அறிவுத்திறன் நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

பெயர்களும் & வகையும்

நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் ‘நாய்’ என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள். அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய். சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)

நாய்களின் இனப்பெருக்கம்

நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.

ஓநாயிலிருந்து வேறுபாடு

ஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும். மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும். நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை .ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள்.

முந்தைய கட்டுரைநரி (Fox)
அடுத்த கட்டுரைபூனை
GOBIKRISHNA D
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments