நினைவுகள்

0
1186

புன்னகை சிந்தும் பொழுதெல்லாம் 
எங்கோ தவறவிட்ட நேசங்களை
உன்னில் கண்டு கொள்கிறேன் 
நினைவுகளாக மட்டும்….

அனைத்தையும் பகிரும் தாயாக
அணைத்து கொள்ளும் தந்தையாக 
அன்பான தமக்கையாக
அழகான தங்கையாக 
அடங்கி போகும் அண்ணணாக 
எல்லா வண்ணமாகவும் 
என் எண்ணம் முழுவதும் 
நீ நிறைந்திருந்திருந்தாய்…..

ஆனால் இன்று தலை
கோதும் காற்றாக 
இயற்கையூடாக மட்டும் 
என்னோடு இணைகிறாயடா..

சூழ்நிலைகள் பலவற்றில் 
சூழ்ந்து கொண்டவனாய்
இருந்த நீ – இன்று தொலை 
தூரத்தில் இருந்து – என் 
புன்னகையை மட்டும் 
ரசிப்பவனாய்…

நினைக்கும் போதெல்லாம் 
கடலளவு கண்ணீர்கள் 
மறைக்கப்படுகிறது என்னுள்
மெதுவாக….

வசியம் செய்யும் – உன் 
பிஞ்சு மொழிகள் மனதை 
கொள்ளும் மென்மையான 
ரணங்களாய் இன்றும்…

சொந்த மொழிகள் சேர்த்து 
கவி தொடுக்க என்றும் 
முடியாதது உன் காதல் 
மொழிகள்….

மகிழ்ச்சியோடு இருக்க 
உன்னால் சபிக்கப்பட்டவளாய் 
நீயில்லாது தவிக்கும் 
வேதனையில் தவளும்
இவளுக்காய் உன் 
நினைவுகள் மட்டும் 
போதும்….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments