நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்

0
1169

Cloud Computing என்றழைக்கப்படும்  வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை சேமித்து வைப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு சொல்லப்படும் காரணமாக உள்ளது 1. இந்த கணினிகள் அவர்களின் நிறுவன வளாகத்தில் இருப்பதில்லை, ஒரு பொதுவான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெளியிடங்களில் உள்ளன.

2. கணினி செயலில்களில் தற்போது புதிதாக வந்துள்ள பாதுகாப்பு பிரச்சனைகளான “Spectre” “Meltdown” போன்றவற்றால்  பொது கட்டமைப்பில் உள்ள Cloud கணினிகள் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். இதனால் அருகாமையில் உள்ள வேறு தளம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தங்களுடைய தரவுகள் உள்ள கணினியையும் சேர்த்து தாக்கலாம் எனும் அச்சம் உள்ளது. Walmart நிறுவனம் தனது தொழில்நுட்ப பிரிவு Amazon WebServices  கிளவுட் கட்டமைப்பை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற அச்சம் இந்த துறையில் இருக்கும் MicrosoftAzure , GoogleCloud போன்றவற்றையும் பாதிக்கிறது. இதனால் கூகிள் ஒரு பரிச போட்டியை அறிவித்துள்ளது. நிரல் வல்லுநர்கள் எவரும் PublicCloud கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் யுக்திகளை சமர்ப்பிக்கலாம். Confidential Computing Challenge (C3) என்றழைக்கப்படும் இந்த போட்டி ஏப்ரல் 1 2019 வரை நடக்க இருக்கிறது. பரிசாக $15000 வரை வழங்கப்பட இருக்கிறது.

திறந்தநிலை நிரல்களை கையாளும் உலகின் மாபெரும் நிரல் தொகுப்பு மென்பொருள் GitHub  தளத்தை அண்மையில் Microsoft 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது நினைவிருக்கலாம். இந்த GitHub மென்பொருளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என கண்டறியும்  “பிழைகண்டறிவோர் சன்மானம்” GitHub Bug Bounty $20000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையினை தற்போது $30000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது Microsoft . இந்த மென்பொருளில் பிழை கண்டுபிடிப்பது  மிகவும் கடினம், எனவே மிகவும் சிரமப்பட்டு பிழையை கண்டறியும் ஒருவருக்கு அவரை ஊக்கப்படுத்துவது அவசியம், அதனால் இந்த தொகையை அதிகரிக்கக் காரணம் என தெரிவித்துள்ளனர். அதோடு இந்த மாதிரி நல்ல எண்ணத்துடன் பிழைகளை கண்டறிவோர், தற்செயலாக சில சேதாரங்களை மென்பொருளுக்கு ஏற்படுத்திவிடுவர், அவர்களின் மீது நட்டஈடு வழக்கு பதிவு  செய்யவேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடும். இனி வழக்கு தொடுக்க மாட்டோம் எனவும் தனது கொள்கை அறிக்கையில் மாற்றம் செய்துள்ளது GitHub.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments