நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)

1
2705
வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை  4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு காட்டாடு இனத்திலேயே மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டது. இவ்விலங்கு இந்தியாவில் தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன.
 
வரையாட்டின் பேறுகாலம் 178 முதல் 190 நாட்கள், இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு குட்டி ஈன்றெடுக்கும். குட்டி பிறந்த பிறகு தாய்ப்பாலை பெரிதும் நம்பியிருந்தாலும், 2 முதல் 4 வாரங்களில் பிற திட உணவுகளை உண்ணத்துவங்கும். வரையாட்டின் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள்.
 

 

 

 

 

 

 

2 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வரை ஆடு பற்றி இன்னும் விரிவாக அறிய ஆசைப்படுகிறேன்