நீ வீழும் நாள் வரும்..!!!

0
719
FB_IMG_1588529078318

வேதியல் வினையோ நீ
யார் விட்ட சாபமோ
நீ!!

சுவாசம் கூட
தாழ்ப்பாள் இட்டே
இயற்கையை சுவைக்கிறது..

வேதம் ஓதிய பள்ளியும்
அறிவை வளர்த்த கூடமும்
மூச்சை நசுக்கி முத்திரை
குறுக்கம்

கொல்லுயிரியின் தாக்கம்
யாருமில்லா சாலையும்
கூட்டமில்லா சந்தையும்
தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்
மனிதமும்

ஓ!!!
வீரியம் கொண்ட எதிரியே
உன் கிரீடத்தின் அர்த்தம்
இன்றுதான் புரிந்தது

இருந்தாலும்,
ஒன்றை மட்டும் மறக்காதே
வருவான் ஓர் நாள்
உன்னையும் வீழ்த்தும்
சக்திமான்

அதுவரை…
நின்று திணறும் சுவாசமும்
பீதியில் கதவடைப்புதான்..!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments