மூலிகையின் பெயர்: நெல்லி
மருத்துவப் பயன்கள்: வேறு எந்த காய்கனியிலும் இதிலுள்ள வைட்டமின் ‘சி ‘ அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
பயன்படுத்தும் முறைகள்:
- நெல்லிக் காயகற்ப(காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும்) மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்குக் கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார். இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
- மாவுச் சத்து – 14 கி, புரத சத்து-0.4 கி, கொழுப்புச்சத்து – 0.5 கி, பாஸ்பரஸ் – 21 மி.கி, கால்ஷியம் -15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி -1 28 மி.கி, வைட்டமின் சி-720 மி.கி, கலோரிகள் – 60.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி எலுமிச்சைச்சாறு 15 மி.லி கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) முற்றிலும் தீரும்.
- இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
- நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.
- நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.
- அரு நெல்லிச் சாற்றால் வெள்ளைப்படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும், மலமிழகும்.
குறிப்பு
வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.
15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை 4 நாள் சாப்பிட பித்தம் தணியும்.