இயற்கை இயைந்த இனிமையெல்லாம் – என்றேனும்
தன்னிலை இழந்ததுண்டா..?
கடல் வற்றிக் காய்வதில்லை
காற்று வீச மறப்பதில்லை
ஆழி முகிழ்தலை
முகில் நிறுத்தவில்லை
ஆதவன் மேற்கில் உதிப்பதில்லை
இவ்வண்ணம் இவையெல்லாம்
தன் இயல்பினுள்ளே….
அவ்வண்ணம் அவ்வாறே
அமைவது நேர்த்தி
அதுவாக…
வாக்கில் வான்மை வகைத்தலும்,
நெறி வாழாது நடத்தலும்,
சிந்தையில் பிறழ்வு களைதலும்
செம்மையாம் வாழ்கைக்கு அடித்தளம் – எனும்
மனித இயல்பு மாறா
மாட்சிமைக்குப் பெயர்தான் நேர்த்தி…
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest