நோன்பு இனிப்பு அடை (Nonbu Sweet Adai)

0
1823

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி மாவு (பதப்படுத்தியது) – 1 கப்

காராமணி (தட்டை பயறு) – ¼ கப்

மண்டை வெல்லம் (தூளாக்கியது) – ¾ கப்

தேங்காய் துருவல் – ½ கப்

ஏலக்காய் – 3 எண்ணம்

தண்ணீர் – 2 கப்

நன்மைகள்: நோன்பு இனிப்பு அடையில் காராமணி இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு. வயிற்றுப்புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

Nonbu Sweet Adai
 

செய்முறை:

  • முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனை வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவினைப் போட்டு வறுக்கவும். நன்கு வறுத்தபின் அதனை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.
  • சல்லடையின் மேற்புறத்தில் உள்ள கப்பியை மிக்ஸியில் போட்டு அரைத்து மீண்டும் சலித்துக் கொள்ளவும். இதுவே மாவினைப் பதப்படுத்தும் முறையாகும். காராமணியை (தட்டைப் பயிறு)  வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.
Nonbu Sweet Adai
  • பின் அதனைத் தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும். பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும். 2 கப் தண்ணீரில் தூளாக்கி உள்ள மண்டை வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும். பின் அதனுடன் குழைய வேக வைத்த காராமணி, தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். 
  • பின் அதனுடன் பதப்படுத்திய பச்சரிசி மாவினை சிறிது சிறிதாக கலவையில் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அதனை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கைகளில் எண்ணையைத் தடவிக் கொண்டு மாவுக்கலவையில் சிறுஉருண்டை எடுத்து வடை போல் தட்டவும்.
  • இந்த வடைகளை எண்ணெய் தடவிய இலையில் வைக்கவும். இவ்வாறே எல்லா மாவினையும் தட்டவும். பின் அதனை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காராடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments