தேவையான பொருட்கள்:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்
வேகவைத்த காராமணி (பயறு வகை) – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
நன்மைகள்: நோன்பு கார அடையில் காராமணி இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு. காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
செய்முறை:
- வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த காராமணி, பச்சரிசி மாவு சேர்த்துக் கட்டியின்றி கிளறவும்.
- சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கனமாகத் தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும். நோன்பு சமயத்தில் இதை விசேஷ உணவாக செய்வார்கள்.
நன்மைகள்: வயிற்றுப்புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது. நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.