பத்ம ஹஸ்தாஸனம்

0
1343

செய்முறை: 

நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும்.  பிறகு குனிந்து தலைமுழங்கால் மீது படும்படி உடலை வளைத்து தன் இரண்டு கைகளையும் குதிகால்களை பிடித்து நிற்க வேண்டும். 20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம்.

மூச்சின் கவனம்

கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள்

நுரையீரல், நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

அதிக இரத்தஅழுத்தம் அல்லது இதயநோய் உள்ளவர்கள், மற்றும் கழுத்துவலி இடுப்புபிடிப்பு உள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.

Bharadvaja’s Twist

குணமாகும் நோய்கள்

ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.

ஆன்மீக பலன்கள்: படர் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப்படுகிறது.

பயன்பெறும் உறுப்புகள்: வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments