பனீர் பால் கொழுக்கட்டை (Paneer Milk kolukattai)

0
1657

தேவையான பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – அரை கப்

நீர் – ஒரு கப்

உப்பு – கால் சிட்டிகை

எண்ணெய் – 2 சொட்டு

சுண்டக் காய்ச்சிய பால் – ஒரு கப்

சிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் – 10

ஏலக்காய்தூள் – சிறிதளவு

சர்க்கரை – 50 கிராம்

Paneer Milk kolukattai
 

செய்முறை:

  • நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றிக் கிளறவும்.
  • ஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள், வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • இதனுடன் சுண்டக்காய்ச்சியப் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

நன்மைகள்:  மழைக்காலங்களில், மாலை நேரத்தில் குழந்தைகள்  மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்புப் பலகாரம். இதில் இருக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments