பப்பாளி (Papaya)

0
1798

மூலிகையின் பெயர்:  பப்பாளி

மருத்துவப்  பயன்கள்: பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப்பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது.

பயன்படுத்தும் முறைகள்:

  • பப்பாளிக்காயைச் சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம் நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.
  • மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும் கலையும். விதையைத் தூள் செய்து 5 கிராம் வெல்லத்தில் சாப்பிடக்  கருக்கலையும்.
  • நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.
  • இதன் பாலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவ வாய்புண், உதட்டுப்புண் குணமாகும். மண்டைக்கரப்பான், சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மசித்துப் போட குணமடையும்.
  • நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
  • பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

 
Papaya

கல்லீரல் வீக்கம் குறையும்

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குaண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வரக் கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments