பரிணாமம்

0
1282

சூன்யமான காலமென்ற ஒன்று
எல்லார் வாழ்விலும்
ஒரு பகுதி உண்டு.
அக்காலத்தினை
சபித்துக் கொண்டு
அங்கேயே தேங்கியவரும் உண்டு.
மாறாக, நியதிகளை ஏற்று
அவைகளை கடந்தவரும் உண்டு.
ஏன்?
தாக்குப்பிடிக்க இயலாது
மாண்டு போனவர்களும் உண்டு.

அப்போது தான்…! 
வாழ்வின் எல்லா விதமான பரிணாமமும், கண்ணெதிரே விரிந்து கிடக்கும்.
வலிகளின் பள்ளத்தாக்கில்
வீழ்ந்து கிடக்கையில், 
இன்னொரு மகா துன்பமும்
வந்து சேர்ந்து கொள்ளும்.

இனி பணயம் வைக்க
கண்ணீரே இல்லை, என்றளவுக்கு
தீர்ந்து ஓய்ந்து விட்டிருக்கும்.

நம் பலவீனங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக
எம்மிலிருந்து வெளியேறி, 
வெளியே தெரியத் தொடங்கும்.

இதையெல்லாம்
சகித்துக் கொள்ள இயலாமல்,
தூக்கம் தொலைத்து, 
நிம்மதி தொலைத்து, 
சர்வமும் தொலைத்து விட்டு நிற்கையில், அதிலிருந்து வெளிவர
இவ்வாழ்வு நிச்சயம், 
நமக்கு ஓர் சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தித் தரும். 
இல்லையேல்…!
வேறு யாரோ ஒருவரின்
கரங்களைக் கொண்டு
நம்மை தூக்கி விட வழி வகுக்கும்.

மதி நுட்பமாய்
ஓர் அளவுகோல் கொண்டு நோக்கினால்…! எமது இரண்டாம் நிலை
வாழ்வின் நகர்வு, 
ஆசிர்வதிக்கப்பட்டதாய் இருப்பதற்கு, அப்போது நம் கரங்களைப் பற்றி 
அழுத்தமாய் மீளுதல் உணர்த்திய, 
அவர்களே சொந்தக்காரர்கள்.

வாழ்வு அளிக்கும் எல்லாமே பெருங்காதலாய் இருந்து விடாது.
சொற்ப தோல்விக் காதலும்,
சில ஓர் பக்கக் காதலும் கூட
இருக்கத் தான் செய்யும்.

ஒரு முறையாவது
பெருங்காற்றடித்து ஓய்ந்து,
பின்னர் நிர்க்கதியாய் நின்றால் தானே கர்வங்கள் தகர்க்கப்படுகின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments