செய்முறை:
விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் படத்தில் உள்ளது போன்று மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
இது தான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும். பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்வதால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.
மூச்சின் கவனம்
கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள்
தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும்.
எச்சரிக்கை
கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.
பயன்பெறும் உறுப்புகள்: தோள்கள்
ஆன்மீக பலன்கள்: மலை போன்று உறுதியாக மனநிலை அமையும்.