பஸ்சி மோத்தாசனம்

0
1468

செய்முறை: 

நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும்,பாதங்கள் இணைந்து  இருக்கட்டும்.முன்னாள் குனிந்து கைகளால் உள்ளங்கால்களை தொடவும்.கழுத்துக்கு கீழ் உள்ள உள்ள பகுதிகளை மடக்கி,  தலையால் முழங்கால்களை தொடவும்.கைகளை மெதுவாக எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி,உடம்பையும் நேராக வைக்கவும்.

மூச்சின் கவனம்  

குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள்

உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.

Paschimottanasana
ஆன்மீக பலன்கள்: மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியினை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியினை உயர்த்தும்.
பயன்பெறும் உறுப்புகள்: முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்
குணமாகும் நோய்கள்
அஜீரணம், மலச்சிக்கல், இடுப்பு, வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம், மூலநோய், ஜீரணக்கோளாறுகள் முதலியவற்றிற்கான சிகிச்சையில் பலனளிக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பைக் குறைக்கிறது.
எச்சரிக்கை
அதிக இரத்த அழுத்தம் கழுத்துப் பிடிப்பு, நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரணக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments