தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 200 கிராம்
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
துவரம்பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும்.
- கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும்.
- பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால். பாகற்காய் பிட்லை தயார்.
நன்மைகள்:
- பாகற்காயில் அதிக கசப்பு தன்மை கொண்டது. பாகற்காய் இது உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
- நீரிழிவு நோயிகளுக்கு பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கலாம் என கூறப்படுகிறது.