பிரண்டை (Cissus-quadrangularis)

0
1752

வேறுபெயர்: வச்சிரவல்லி

மருத்துவப்  பயன்கள்: இது மூலம், வயிற்றுப்புண், வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல் போன்றவற்றிற்கு சிறந்தது.

பயன்படுத்தும் முறைகள்:

பேதி-வாந்தி

  • குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும்.
  • செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

ஆஸ்துமா

  • நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர, வயிற்றுப் பொருமல், சிறு குடல், பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
  • மூக்கில் வடியும் இரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம். இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
  • பிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சம அளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

Cissus quadrangularis (pirandai)

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம். இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

வயிற்றுப்புண்

தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிற்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிடக் குணமாகும்.

உடல் பருமன்

பிரண்டை உப்பை  2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா

இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

காதுவலிக்கும் காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும்.

வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க குணமாகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments