பிரிவு எண் 134

0
1186

நீ இல்லாமலும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
நீ இல்லாமற் போனதற்கான தடயங்களேதும் 
இல்லாமலில்லை..

இருந்தும்..
நீ இல்லாமலும் புன்னகைக்க முடிகிறது..
நீ இல்லாமலும் கவிதை எழுதிட முடிகிறது..
நீ இல்லாமலும் உறங்கிப்போக முடிகிறது..

நீ இல்லை தான் ஆனாலும்
இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றேன்..
நீ இல்லை தான் என்றாலும் 
நினைவுகளோடு தான் சுழல்கின்றேன்..
நீ இல்லை தான் ஆனபோதிலும்
நம்பிக்கையோடு தான் மலர்கின்றேன்..

இருப்பதற்கும்
இல்லாமலிருப்பதற்குமான
வித்தியாசம்
அறிவாய் தானே..?!

விலகிய ஒரு பொழுதில்..
இல்லாமற் போனவொரு இருத்தலுக்காய் வருந்தி நிற்கிறாய்..

ஒரு இருத்தலில் அப்படியென்ன பெரிதாய் இருந்துவிடப்போகிறது..?!

உன் இருத்தலில் தான் என் எல்லாம் இருந்தது!!

ஆம்..
நீ இல்லாமலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறேன்..
இருந்தும்
இயல்பாய் இருப்பதற்கு தான் என் அத்தனை போராட்டங்களும்..!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments