பில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்

0
1537

அறிவியல் கண்டுபிடிப்புகள் பல உயரங்களை தொட்டு இருந்தாலும், பூமியில் பல கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இன்னும் கிடைக்கவில்லை. இன்று நாம் வெஸ்டர்ன் டாய்லட், இந்தியன் டாய்லட் என இரண்டு வகை கழிப்பறைகளை வீடுகளில் காட்டுகிறோம்.    கழிப்பறை என ஒன்று இருந்தாலும் அதை சுத்தப்படுத்த தேவைப்படும் தண்ணீர், கழிவு நீரை கடத்தும் சாக்கடை வசதி, சரியான சாக்கடை வசதி இல்லாததால் தொற்று நோய் உருவாதல் என பிரச்சனைகள் பல நகரங்களில் உள்ளன.

 

நமது கிராமங்களில் இரண்டு நுழைவு சாலைகளும் மந்தை காடாக இருக்கும், இவற்றை தடுக்க தண்ணீர் தேவைப்படாத அல்லது மக்கள் சுகாதாரமாக / சுத்தமாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறையை உருவாக்கலாமா என நான் சிறுவனாக இருந்தபோது யோசித்துள்ளேன். அதாவது, ஒருவர் கிராமத்தில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றால் கதவு அருகே உள்ள ஒரு பெரிய குழாயில் அரை குடம் நீரை ஊற்ற வேண்டும் பிறகு கதவு தானாக திறக்கும். பின்னர் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்தீகரித்தும் , அவர் ஊற்றிய நீரில் ஒரு பகுதியையும் அவர் பயன்படுத்த கொடுக்கும். கழிவுகளை கெட்டியாக்கி வரட்டி போல மாற்றி இயற்கை எரிவாயு பயன்படுத்த விரும்புவோர், சில குடம் தண்ணீரை கட்டணமாக ஊற்றி விட்டு எடுத்து செல்லலாம்.  ஆக இவற்றை சுத்தப்படுத்த மனிதர்கள் தேவையில்லை எனும் வகையில் யோசித்திருந்தேன். ஆனால் இது போன்ற கனவு திட்டம் இன்று பில் கேட்ஸால் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை தீர்க்கும் விதமாக  சீன தலைநகர் பெய்ஜிங் ‘ல் நடந்த  “ மீள் உருவாக்க கழிப்பறை கண்காட்சி” யில் , ஒரு ஜாடி மனித கழிவை மேடையில் காட்டி  பேச்சை ஆரம்பித்தார், மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகை கழிப்பறை மாடல்களை எவரும் சமர்ப்பிக்கலாம் என பல போட்டிகளை “கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை” (பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா) சார்பாக நடத்தி பல வகை புதிய நவீன கழிப்பறைகளை உருவாக்க பல மில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறார்.

பல வகைகளில் உருவாக்கப்படும் இந்த கழிப்பறைகளில் சில வகைகள்:

கழிவுநீரை குடிநீராக மாற்றுதல்:

இந்த வகை கழிப்பறைகளில் சேரும் மனித கழிவுகளை ஒரு பொதுவான சுத்தீகரிப்பு மையத்திற்கு (ஒரு சிறிய கண்டைனர் பெட்டி அளவில் சூரிய ஒளியில் இயங்குகிறது) வருகிறது. அந்த கழிவுகளை சில நுண்ணயிரிகள் உணவாக உண்டு, வேறு சில வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து சுத்தமான குடிநீராக வெளி வருகிறது.

கழிவுகளை இயற்கை எரிவாயுவாக மாற்றுதல்:

ஒரு குடியிருப்பில் உள்ள வீடுகளில் சேரும் அனைத்து கழிவுகளையும் ஓரிடத்தில் அனுப்பி அவற்றில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுத்தல்.

தண்ணீர் ஊற்றத் தேவையில்லாத சுழலும் கழிப்பறை

நம் வேலையை முடித்துவிட்டு மூடியை  மூடினால் போதும். கழிவுகளை சுழன்று கீழே அனுப்பி அதிக வெப்பத்தில் எரித்துவிடும்.

  1. கழிவுகளை கோப்பையில் இருந்து அகற்ற குறைந்த தண்ணீர் பயன்படுத்துவது.
  2. தண்ணீரே இல்லாமல் கழிவுகளை அகற்றுவது.
  3. வீடுகளில் செப்டிக் டேங்க் என்ற ஒன்றே தேவையில்லாமல் செய்வது
  4. கழிவறை கழிவுகளை பொது சாக்கடைக்கு அனுப்புவதை தடுத்தல்
  5. கழிவுகளில் இருந்து மாற்று பொருட்களை உற்பத்தி செய்தல்

ஆகிய அம்சங்கள் அடங்கிய பல வகை கழிப்பறைகளை உருவாக்கி உலகம் முழுவதும் நிறுவ வேண்டும் என பில் கேட்ஸ் முயற்சித்து வருகிறார். இதன் ஒரு மாதிரி வடிவத்தை தென்னாப்பிரிக்காவில் உள்ள மக்கள் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments