புரிதல்

0
1402

இப்படித்தான் இருக்க வேண்டும்
இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்
இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்
இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்
உன் மீது எனக்குண்டு.

என் ஆசைகளை
நிறைவேற்றுகிறாயோ இல்லையோ, 
என் நிராசைகளுக்கு
காரணமாய் இருந்திடாதே…!

போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்
எழுவதான நேசமொன்றில்…

இதுவெல்லாம் தான் என் விருப்புக்கள் என்பதை நாம் சொல்லாமலே 
புரிந்து கொண்டு நடக்கிறார்களே? 
என்பதன் பிரமிப்பே
அலாதியான திருப்தியாய் மாறிடும். 

இது பிடிக்கவில்லை 
இதை ஏற்கும் மனம் இல்லை
அல்லது…
ஏனோ மனதில் ஒட்டவில்லை, 
போன்ற விருப்பங்களுக்குள்
அடங்காத செயல்களில் கூட
அதை வெளிப்படையாக உரைத்து விடாது மெளனித்து கிடக்கையில்…!

இதற்கான மெளனம் தான்
இதுவென்று புரிந்து கொண்டு, 
அதை தவிர்த்து விட தெரிந்த
ஓர் உறவின் ஆத்மார்த்தமான
நேசத்தை போல்
வேறென்ன இருந்து விடப் போகிறது. 

ஆயினும்…!

எத்துனை தான்
உலகில் யாரும் புரிந்து கொள்ளாத அளவுக்கோ,

இன்றேல்…,

யாருக்கும் புரிந்து கொள்ள இயலாத அளவுக்கோ,

நம்மை அவர்கள் மட்டும் தான் புரிந்து கொண்டிருந்தாலும், 
ஓர் இடுக்கில் ஏதோவொரு
மனக்கசப்பு உள் நுழைந்து, 
முன்னாள் உள்ள
அத்துனை நேர்த்தியான புரிதலையும் கேள்விக்குறியாக நிறுத்தும்
ஓர் தருணம் வருமே…! 

அப்போது மாத்திரம்
கனமான ஓர் கேள்வி
உள்ளே நச்சரிக்குமே…!
அது கூட அந்த புரிந்துணர்வின்
உச்சகட்ட நேச இரைச்சலின்
தாக்கங்கள் தான்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments