ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/
அன்பு அது கரைந்திடாத சமூகம்/
குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/
கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/
இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/
நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/
பெண் என வீழ்த்திடாத சமூகம்/
பேதை அவள் எனத் தூற்றிடாத சமூகம்/
ஆண் தன் கர்வமும் நான் என்னும் எண்ணமும்/
அனைவருமிங்கே உயிரென ஏற்கும் உன்னத சமூகம்/
உருவாக்கிட புறப்படு தலைவி/
கரைந்துவிடும் கால வளையல் அல்ல/
கரை சேரும் ஆழ வரம்பு அவள்/
-நாஓஷி-