எல்லோரும் இவ்வுலகில் இன்பங் காண
இருப்பவர்கள்உலகினுண்மை உணர வேண்டும்
வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம்
வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும்
எல்லையை எழிலாக இனிதாய் வைத்து
இடரின்றி இருந்திடவே இயங்க வேண்டும்
நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி
நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்!
நாள்த்தோறும் குறளினையேக் கையில் கொள்ள
நன்னெறிகள் நம்மிடையே நடனமிட வேண்டும்
நூல்த்தோறும் ஊர்ந்த்திட்டால் உலகி லெங்கும்
உண்மையாய் மனிதநேயம் உயர்ந்து நிற்கும்
சூல் கொண்டு சுறுசுறுப்பாய் இயங்கி விட்டால்
சுகமென்னும் பொதுமையிலே நீந்தி நிற்போம்
தொளகளெல்லாம் ஒன்றிணைந்திட் டாலே நம்மில்
புது உலக வாழ்க்கையத்தில் மிதந்திடு வோமே!
பொதுக்கல்வி மாந்தர்க்கு உரிமை யாக்கி
புவியெங்கும் அறிவொளியும் பரவ வேண்டும்
பொதுநீதியின் வழித்தடங்கள் ஒளியா யாக்கி
புத்தாக்கம் கொண்டுவாராய் விளங்க வேண்டும்
உத்திட்ட தொழில்யாவும் பொதுமை யாக்கி
உயிர்களெல்லாம் உறவுகொண்டு வாழ வேண்டும்
போரற்ற உலகமாகத் திகழ வேண்டும்