போலி முகங்கள்

0
2154

வெடித்துச் சிதறி எடுத்து வீசப்பட்டது
எனது இதயத்தின் ஒவ்வொரு துகளும்..

அறுக்கமுடியாத அணுவின் மூலமாகி..
பரந்து விரிந்த அண்டத்தினுள்..
படர்ந்து கிடக்கின்ற இருள்களுக்கு
எல்லாம் சிறு இரையாகிவிட்டது..!! 

விளக்கு அணைந்ததும்
ஒளி கவ்வப்பட்ட இடம்
ஆகி போனது எனது உணர்வுகள்..!! 

எங்கு நான் தேடுவது?
எப்படி சேகரிப்பது?
எதனைக்கொண்டு
ஒட்டிச் சேர்ப்பது..!! 

அதற்குள் என் உயிரும்
என்னை விட்டு அந்த இதயம் போல்
சிதறி காணாமல் போய்விடுமோ..!! 

இதயமின்றி துடியாய்
துடிக்கின்றேன் நான்..!! 

எங்கும் நிறைந்திருக்கின்ற
போலி முகங்கள்…..
பொய்யான நேசங்கள்….
எங்கோ ஒரு மூலையில் நின்று
திரும்பிப் பார்க்கின்ற நாடகங்களும்..

நான் அழைக்கின்றேன்
புலம்பித் தவிக்கின்றேன்..!! 

இன்னும் தூரமாய்
இன்னும் வேகமாய்
இன்றைய காலம் இப்போதும்
நகர்ந்து கொண்டிருக்கிறது..!! 

காற்றோடு கரையத் தயாரான
நிலையினில் மனம்.!! 

உயிர் நூலில் கட்டி இழுத்து
நிறுத்தும் முனைப்பில் நான்..!! 

மிகப் பெரும் மரணப் போராட்டம் இது..!! 

விம்மி விழுகின்றது உணர்வுகள்
எனக்குள்ளேயே சொல்ல வார்த்தைகள் கிடைக்காததால்..!! 

சொன்னாலும் கேட்கின்ற
தூரத்தில் நிலைமைகள் இல்லை..!! 

இயல்பாய் இருந்த உலகத்தினுள்
போலியை புகுதியவன் யாரோ…

மெழுகாய் இருந்த அழகில்
திரி கண்டெடுத்து தீ மூட்டியவர்கள்
யாரோ..!! 

ஏற்றிய அவர்களே
ஊதி அணைத்துவிட்டு செல்லும்
நாடகமா இந்த வாழ்க்கை..!! 

திரி கருகி
வெளிவரும் ஆவியென
சில உறவுகள்
அந்த இருளுக்குள்
புதையுண்டு
மறைந்து கொண்டிருப்பதை
மெல்ல அறிய ஆவலாய்
புது சந்ததியினரும்

கொட்டி கிடக்கின்றன துன்பங்கள்
நிறையவே…
அதனுள் எட்டிப்பார்க்கும் சில
இன்பங்களும்…

என் உலகமெல்லாம் நிறைந்திருக்கும்
அந்த மரண ஓலத்தின்
ஒரு துளிகூட உங்கள் உலகத்தினுள்
எதிரொலிக்கவில்லையா…?

என்று கொட்டி தீர்க்கின்றாள் அந்த
போலி உலகில் புதையுண்டு
நகர கணம் இன்றி மெல்ல
அனைத்தையும் தொலைத்த
அவள்…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments