மசால் வடை (Sabudana Vada)

0
1518

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 2 கப்புகள்

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 2 பற்கள்

பச்சைமிளகாய் – 2

பெருஞ்சீரகம் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிது

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு

கொத்துமல்லி தழை – 1/4 கட்டு

உப்பு – தேவையான அளவு

Sabudana Vada

செய்முறை:

  • முதலில் கடலைப் பருப்பை  2 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு கழுவி கலந்து நீரை வடித்து விட வேண்டும்.
  • கிரைண்டர் அல்லது மிக்ஸியில்  கடலைப் பருப்பைப் போட்டு அத்துடன் இஞ்சி, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும். மிகவும் மைய அரைக்க வேண்டாம். பிறகு மாவை வழித்தெடுக்கவும். இப்பொழுது வெங்காயம் கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை இவற்றைப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
  • இப்பொழுது மாவுடன்  பொடியாக வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை, பெருங்காயம் சேர்த்து, தேவையான உப்பைப் போட்டு கலந்துக்கொள்ளவும்.
  • மாவு வடை தட்டும் பதத்தில் இருக்கவேண்டும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி காயவைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மாவை சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை தட்டி எண்ணெயில் போட்டு ஒரு புறம் சிவந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.
  • இது போல் எண்ணெய் கொண்ட மட்டும் தட்டிப் போடவும். இப்பொழுது சுவையான, மொறுமொறுப்பான வடை தயார். இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

நன்மைகள்:  பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும் கூட.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments