மஞ்சள்

0
2227

மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

அறிவியல்படி குர்குமா லொங்கா என்று அழைக்கப்படும் மஞ்சள் இந்தியர்களின் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. வேத காலத்திலேயே மஞ்சளின் பயன்பாடு இருந்து வருகிறது. இந்தியர்களின் சமையலில் பயன்படுத்தப்படும் இதில் கலோரி இல்லை. ஆனால் நார்ச்சத்து நிறைந்தது. வண்ண நிறத்திலான இதில் கிருமி நாசினிகள் அதிகம்.

மஞ்சள்அரிணம் அல்லது பீதம் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

  • மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி.
  • தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.
  • இதன் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை.  நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை.  இவை மஞ்சள் என்கிற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
Turmeric

பயன்கள்:

 

  • மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.
பச்சை மஞ்சள்

பச்சை மஞ்சளின் தோலினை நோக்கி, ஜூஸ் ஆக பிழிந்து குடித்தால் உடல் சூடு குறையும். நீங்கள் வயிற்று அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தால் 2 மேசைக்கரண்டி மஞ்சள் ஜூஸை 4 நாட்களுக்கு தொடர்ந்து அருந்தினால் அந்நோய் குணமாகும்.

குளி மஞ்சள்

குளி மஞ்சள் காளான்களினால் உண்டாக்கும் பாதிப்பைப் போக்க வல்லது. மஞ்சளோடு வேப்பில்லையை கலந்து பூசினால் எவ்விதமான தோல் பிரச்சனைகளும் தீரும்.

மஞ்சள் அம்மை நோயினைப் போக்க வல்லது. மஞ்சளை நீரில் கலந்து அதில் வேட்டியை ஊறவைத்து பின் அதனைக் காயவைத்து, அதில் அம்மை நோய் தாக்கியவர்களைப் படுக்க வைத்தால் நோய் விரைவில் தீரும். அதோடு அவர்களைச் சுற்றி மஞ்சளினை தெளித்து வைத்திருந்தால் அந்நோய் பரவாது.

கறி மஞ்சள்

கறி மஞ்சள் சமையலுக்குப் பயன்படுத்தப்படும். அதோடு சளி, மற்றும் தலைவலியைப் போக்கும்

அ) மஞ்சளைத் தூளாக்கி நீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஓரத்தில் வைத்துவிடவும்.

ஆ) எண்ணெயைச் சூடாக்கி, சில நிமிடங்களுக்கு தலைமுடியில் தேய்த்து கொள்ளவும்.

இ) முடியைக் கழுவும் போது கொதிக்க வைக்கப்பட்ட மஞ்சள் நீரைப் பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்யும்போது உடலில் தங்கியுள்ள சளிகள் வெளியேறும். கறி மஞ்சளைப் பயன்படுத்தி குழந்தைகளைக் குளிப்பாட்டலாம்.

இந்த எண்ணெய் குழந்தைகளின் காய்ச்சலுக்கும் சளிக்கும் சிறந்த மருந்தாகும். அதோடு அரைத்த கறி மஞ்சளைக் குழந்தைகளைக் குளிப்பாட்டுகையில் உடலில் தேய்த்துக் குளிப்பாட்டலாம். இது தோல் அரிப்புகளைப் போக்குவது மட்டுமல்லாது தோலினைப் பளப்பளக்க செய்யும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments