மனிதி – மானுடத்தில் சரிபாதி Manithi Tamil Short Film|Dedicated to All Women

0
1246

மாதவிடாய் என்பது இயற்கையானது, அதில் கூச்சப்படவோ தவிர்க்கப்படவோ எதுவுமில்லை. ஆணாதிக்க சிந்தனைகளுக்கும், சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும் பயந்து பெண்களின் வலியை உணரவேண்டும் எனவும் அது பற்றிய பிரச்னைகளை பெண்கள் தயங்காமல் பேசவேண்டும் எனவும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பேசவேண்டும் எனவும் அழுத்தமாக பதிவு செய்கின்றவகையில் உருவாக்கப்பட்டது மனிதி குறுந்திரைப்படம்

பெண்கள் மீது சுமத்தப்படும் போலிப் புனிதங்கள், புனிதம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகள், சமுகத்தால் திணிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்கள் போன்றனவற்றை கேள்வி எழுப்பும் மனிதி குறுந்திரைப்படம் மாதவிடாய் பற்றி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இது வெறும் திரைப்படம் என் படத்தின் தலைப்பு மற்றும் கதை சமுகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட, பேசப்படமுடியாத ஒரு விடயம் என்பதாக கருதுவதால் இப்படத்தை இயக்குவதற்க்கு பயம் ஏற்பட்டது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை எனது தாய் , சகோதரி மூலம் அறிந்து கொண்டேன். இதனை ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து நான் ஒரு எழுத்துருவை உருவாக்கினேன். இதனை படமாக்குவதற்க்கு நடிகர்கள் கமரா போன்ற செலவுகளை எண்ணி படப்பிடிப்பை தொடங்க வில்லை. முகப்புத்தகத்தில் கோடீஸ்வரன் அண்ணா அவருடைய முக புத்தகத்தில் நல்ல கதைக்கான படப்பிடிப்பு செலவினை தான் ஏற்றுக்கொள்கின்றேன் எனும் பதிவை பார்த்து அவருடன் கலந்துரையாடி உடனே கட்டாயம் செய்வோம் என்று நம்பிக்கை அளித்தார். இதற்கான நடிகர்களை தெரிவு செய்வதில் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. தாய்மார்கள் மாதவிடாய் என்பது அழுக்கான, அசுத்தமான ஒரு விடயமாகவே கருதுகின்றமையால் நான் நண்பிகளிடம் கலந்துரையாடுவதற்கு வெட்கம் கூச்சம் ஏற்பட்டது. இதனை எனது தந்தையிடம் கலந்துரையாடினேன். அவர் பெண்களிடம் இயற்கையாக நிகழ்கின்ற விடயம் இதனை பெண்களிடம் கலந்துரையாடலாம் என கூறினார் அதன் பிறகு எனது பலகலைக்கழக நண்பிகளிடம் கலந்துரையாடினேன். நிறைய நண்பிகள் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. நண்பி நிலோசினி என் கதையினை கேட்டதும் நடிக்க  முன்வந்தார். மாதவிடாய் என்று கூறினால் முகம் சுளிக்கும் ஆண்களில் பல்கலைக்கழக சிறந்த நாடக கலைஞன் ஸ்ரீகாந் நான் நடிக்கின்றேன் என்று கூறினார். ஒரே நாளில் படப்பிடிப்புக்கள் முடிந்தன. இதனை விஸ்னுஜன் கமராவில் துல்லியமாக பதிவுசெய்தார். படத்திற்கான முழு செலவையும் கோடீஸ்வரன் ஏற்றுகொண்டு எல்லோரிடமும் நல்ல வரவேற்பை பெறும் வகையில் கோடீஸ்வரன் தயாரிப்பில் வெளியாகியது. மனிதி படம் வெளியானது. சமூக நண்பர்களிடம் ஆண்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டது என விமரசனங்கள் மூலம் அறிந்துகொண்டோம். படைப்புக்கள் பிறிதொரு மனிதனில் சமுதாயத்தில் ஏற்படுத்தும் மாற்றமே ஒரு இயக்குநராய், கலைஞனாய் எனக்குக் கிடைத்த வெற்றி என கருதுகின்றேன்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments