மரத்தின் குரல்

0
689

 

 

 

 

சூரியன் சுட்டெரித்தபோது
நிழலாகவும் நீராகவும்
உங்களை சூழ்ந்துகொண்டேன்

வெயிலில் வெந்தபோது 
உங்கள் வெப்பம் தணிக்க
குSகுளுவென்று குதித்து
குளிர்ச்சி தந்தேன்

அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்து
நீங்கள் சுவாசிக்க என் சுவாச
காற்றை உங்களுக்கு தந்தேன்

நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழ
என் (பலம்) என்னும் கனியை
என் பலவீனத்தை இழந்து
உங்களுக்கு பலத்தை தந்தேன்

நீங்கள் உணவருந்த உங்களுக்காக
என்உயிரை நெருப்பாக எரித்துக்கொண்டேன்
உங்களின் மனம் குளிர
தாகத்திற்கு தண்ணீரையும்
மனதிற்கு  மருந்தையும்
மகிழ்ச்சியாக வாழ
மழையையும்  தந்தேன்

ஒருமுறை  நீரை ஊற்றி பலமுறை
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்த என்னை
உங்கள் சந்தோஷத்திற்காக சாம்பலாக்குனீர்கள்

இப்படி உங்களுக்கு எல்லா உதவிகளையும்
செய்த என்னை
வெட்டி வேதனையை தருகிகிறீர்களே!

இது நியாயமா…?

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments