மழைவான்

1
548
d82ec0525958745043c9c453cc47e3ae-88152890

இத்தனை நாளாய்…!
எத்தனையோ சோகங்களை
தேக்கி
வைத்துக்கொண்டும்

எத்தனையோ ஏமாற்றங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும்

எத்தனையோ துரோகங்களை
அடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும்

எத்தனையோ பிரிவுகளை
தன்னின் மேல் சுமந்துகொண்டும்

இருந்த இவ்வானம்
இன்று,
எதற்குத்தான் இப்படி
இருண்டுபோய் கிடக்கின்றதோ?

எதற்குத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகின்றதோ?

எதற்குத்தான் இப்படி
அலறல் சத்தம் போடுகின்றதோ?

எதற்குத்தான் இப்படி
ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றதோ?
தெரியவில்லை…

ஒருவேளை,
தாகத்தால் நாவறண்டு கிடந்த
இந்நிலத்துக்காகவா???

இல்லை
தற்கொலை செய்துகொள்ளும்
அவ்விவசாயிக்காகவா???

இருக்கலாம்…

எது உதவ மறுத்தாலும்
இயற்கை உதவ மறுக்குமா..?

 

 

 

 

3 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohamed Faisal
Mohamed Faisal
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super