மாங்காய் வற்றல் குழம்பு

0
1440

தேவையான பொருட்கள்:

மிளகு – 25

காய்ந்த மிளகாய் – 4

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

மாங்காய் வற்றல் – 4 துண்டுகள்

புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

எண்ணெய் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Mango Vathal Curry

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து,  சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
  • புளியைக் கரைத்து, அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, சிறிது கொதித் ததும் மாங்காய் வற்றலைப் போட்டு, வெந்ததும் இறக்கவும்.

நன்மைகள்: 

  • மாங்காயின் சுவைக்கு ஏற்ப அதனுடைய இலை, வேர், பூ பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது.
  • மாம்பழத்தில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட மாங்காயில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.
  • ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
  • மாங்காய் சாப்பிடுவதன் மூலம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments