பார்த்தாலே பரிதவிப்பு
பாலகனே உன் சிரிப்பு
பங்குண்டு எங்களுக்கும்
பசிபோக்க வேண்டுமென்று…
வந்த பசி போனபின்பு
அந்தொன்று மறந்திட்டு…
ஆனாலும்
மனமில்லை எங்களுக்கு
பகிர்ந்துண்டு வாழ்வதற்கு
வட்டமுக சட்டைக்காரா
வாட்டத்துடன் காட்சிதாரா..
வீதியிலே அலைகின்றாய்
முன்னும் பின்னும் பார்க்கின்றாய்
பருந்து போல சுற்றுகிறாய்
கவனிப்பர் யாருமுண்டோ…
பசியை எதிர்த்து போரிடுவாய்
வீரியம் கொண்டு எழுந்துடுவாய்
பசி என்றால் என்ன என்று
பாடம் நீயும் எடுத்துடுவாய்…
பள்ளி செல்லும் வயதினிலே
பசிக்காக அலைகின்றாய்
வறுமையின் சிரிப்பு
வதனத்தில் வந்தாட
வட்டியின் செழிப்பு
செல்வத்தில் கூத்தாட!!!