“காட்டு தீ போல் பரவிய வான்னா க்ரை இரண்டு வருடம் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ளது”
வான்னா க்ரை என்றால் என்ன ?
உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயமான ‘வான்னா க்ரை’ (Wanna Cry or Wanna Crypt) ரான்சம்வேர், இலங்கை, இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகள் ‘வான்னா க்ரை’ மூலம் பாதிப்படைந்துள்ளன. இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இது தான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், ரான்சம்வேர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
இ-மெயில் அல்லது இணையத்தின் மூலமாகவோ அல்லது பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவை மூலமாகவோ, ரான்சம்வேர் கணினியில் நுழையும். அதன்பின் பயனாளர்களால் அக்சஸ் செய்ய முடியாதபடி, கணினியின் ஒட்டுமொத்தத் தகவல்களையும் என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின், கணினியில் உள்ள தகவல்களை மீண்டும் பெற, தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும்படி ஹேக்கர் எச்சரிப்பார். பணம் செலுத்தாவிட்டால் தகவல்களை லீக் செய்துவிடுவதாகவோ அல்லது நிரந்தரமாக அழித்துவிடுவதாகவோ ஹேக்கர் மிரட்டுவதால், பலரும் பயந்து போய் பணத்தைச் செலுத்துவார்கள். தொடக்க காலத்தில் பிரபலங்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து ஹேக் செய்து, ஹேக்கர்கள் மிரட்டிப் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால் இந்த ‘வான்னா க்ரை’ ரான்சம்வேர் இணையம் மூலமாகத் தொடர்ந்து பரவி ஒட்டுமொத்த உலகத்தையே பாதித்துள்ளது.
பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்பது தான் ரான்சம்வேர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம், கணினியைத் தாக்கும் ‘எடர்னல் ப்ளூ’ என்ற டூலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி வடிவமைத்துள்ளது. ‘ஷேடோ ப்ரோக்கர்ஸ்’ (Shadow Brokers) என்ற ஹேக்கர்கள் குரூப் ஒன்று, இந்த டூலை ஹேக் செய்து இணையத்தில் விற்றுள்ளது. ‘வான்னா க்ரை’ ரான்சம்வேர் இந்த டூலைப் பயன்படுத்திதான் சைபர் அட்டாக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி(National Security Agency (NSA) கருவிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வந்த நிலையில் வான்னா க்ரை மீண்டும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்
கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்