தோய்ந்த தோள் கொண்டு
தளர்ந்த நடை பூண்டு
தலையில் நரை பூசி
ஓரம் கட்டிய
அநாதை மானிடர் பலர்
ஏளனமாய் வீசிய
பார்வைகள்,
வையகம் பிறந்தது
வழியற்று வாழ்வதற்கோ
என்றே ஒரு கேள்வி
நெஞ்சம் தைத்திட,
சனியன் தொலைந்தது என்ற
மகனின் அப்பார்வை
உயிர் மட்டும் ஏன்
இந்த உடலுக்கு என
ரணமாய் நினைத்திட,
பேரர்கள் கூட
பேசாமல் சென்றது
பெற்றோராய் இருந்ததற்கு
தண்டனையோ என
மனதில் கணத்திட,
தள்ளாடும் போதெல்லாம்
உன்னை தட்டிக் கொடுத்த
எனை இன்று
தள்ளாடும் வயதில்
தள்ளி விட்டது ஏனோ….?
புரிந்தது வாழ்க்கை…
பிரிந்தது பாசம்….
கவலைப்படாதே மகனே…
இன்று நான்…
நாளை நீ…