முந்தைய முயற்சி தோல்வியுற்ற பிறகு மீண்டும் கூகுள் நிறுவனம் ரோபோட்டிக்ஸ் பிரிவை துவங்குகின்றது

0
963

கூகுள்  என்றவுடன்  நமக்கு அதன் தேடல் தளமான கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் போன்றவையே நம் கண் முன்  தோன்றும்.ஆனால் நம்மை வியப்பில் ஆழ்த்த ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களை போல செயல்படும் ரோபோ எனும் இயந்திர தொழில்நுட்பம் கொண்டு இயந்திர கற்றல் (Machine learning) மூலம் பணிகளை செய்யக்கூடிய எளிமையான மெஷின்களை  உருவாக்க திட்டமிட்டுள்ளது .

எதிர்காலத்தில்  ரோபோக்களின் முக்கிய பங்கை உணர்ந்த கூகுள், ரோபோக்கள் தங்களாக  கற்கும் திறன்களை தெரிந்துகொள்ள உதவும் புதிய வழிகளை ஆராய்ந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே கூகுள் இந்த முயற்சியில் ஈடுபட்டது ஆனால்  அதில் தோல்வியுற்ற நிலையில் இப்போது அதை மீண்டும் தொடங்கியுள்ளது.

கூகுள் இன் புதிய ரோபாட்டிக்ஸ் திட்டத்திற்கு வின்சென்ட் வான்ஹெக்கால் தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் இத்திட்டத்திற்க்காக கூகுள்  இதர ரோபாட்டிக்ஸ் நிறுவனங்களை இணைத்துள்ளது.

கூகுள் ரோபாட்டிக்ஸ் உற்பத்தி, போக்குவரத்து, மற்றும் warehouse automation போன்ற தொழில்களுக்கான ரோபோட்டிக்ஸ் வளர்ச்சிக்கு  இயந்திர கற்றல் (machine learning) என்பது முக்கிய காரணமாக வல்லுநர்கள் நம்புகிறார்கள். இ -கமெர்ஸ் ( E-commerce )நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலை மாடிகளில் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.ஆனால் , அவை ஒரு சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே கையாளுவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால்  கூகுள் இயந்திரங்கள் சொந்தமாகக் கற்றுக் கொள்ளும் திறனுடன் கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

முந்தைய முயற்சிகள் போலன்றி, இந்த முறை,கூகுள் நிறுவனம் பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட எளிமையான ரோபோக்களைப் பயன்படுத்தி  மேலும் புதிய பணிகளைச் செய்வதற்கு பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments